திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.5 லட்சம் வெளிநாட்டு கரன்சி-சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வந்த வெளிநாட்டு கரன்சி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #trichyairport
திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.5 லட்சம் வெளிநாட்டு கரன்சி-சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்
Published on

கே.கே.நகர்:

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த கணபதி என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இன்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த நவாஸ் சிராஜ்தீன்,பீர்முகமது, நசீர் மொய்தீன் ஆகியோர், தங்களது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் கணபதி உள்பட 4 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport

X

Maalai Malar
www.maalaimalar.com