பாலக்கோட்டில் மர வியாபாரி தீக்குளித்து தற்கொலை

பாலக்கோட்டில் குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோலை ஊற்றி மர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பனாரஸ் தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கணேசன் (வயது 38). மர வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கணேசன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து ெகாண்டார்.

இதில் உடல் கருகிய அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர வியாபாரி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com