கேரள ஆளுங்கட்சி தலைவர் மகன் நாடு திரும்ப ஐக்கிய அமீரக அரசு தடை

நிதி முறைகேடு வழக்கில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் கொடியேறி சொந்த நாடு திரும்ப ஐக்கிய அமீரக அரசு தடை விதித்துள்ளது.
கேரள ஆளுங்கட்சி தலைவர் மகன் நாடு திரும்ப ஐக்கிய அமீரக அரசு தடை
Published on

திருவனந்தபுரம்:

துபாயை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெ.ஏ.ஏ.எஸ் சுற்றுலா நிறுவனம், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் கொடியேறி ரூ. 13 கோடியை ஏமாற்றிவிட்டார் என கடந்த மாதம் புகாரளித்தது.

பாலகிருஷ்ணன் மகனுக்கு எதிராக கட்சியின் தலைமையிடம் முறையிட்டு உள்ளதாகவும், கட்சியானது பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை என்றால் பினோய்க்கு எதிராக இன்டர்போல் கைது வாரண்டை நாட வேண்டியது இருக்கும் எனவும் துபாய் நிறுவனம் தெரிவித்தது. பினாய் கொடுத்த காசோலைகள் காசு இல்லாமல் திரும்பியதால், இவ்விவகாரம் தொடர்பாக இன்டர்போலை நாட துபாய் அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டு உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், பினோய் நாடு திரும்ப ஐக்கிய அமீரக அரசு தடை விதித்துள்ளது. அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com