ஆந்திர வாலிபரை ரெயிலில் இருந்து நான் தள்ளி விடவில்லை: திருநங்கை சுவேதா பேட்டி

ஓடும் ரெயிலில் இருந்து ஆந்திர வாலிபரை நான் தள்ளி விடவில்லை என்று திருப்பதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருநங்கை சுவேதா கூறினார்.
ஆந்திர வாலிபரை ரெயிலில் இருந்து நான் தள்ளி விடவில்லை: திருநங்கை சுவேதா பேட்டி
Published on

திருப்பத்தூர்:

ஓடும் ரெயிலில் இருந்து ஆந்திர வாலிபரை நான் தள்ளி விடவில்லை என்று திருப்பதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருநங்கை சுவேதா கூறினார்.

இது குறித்து அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர வாலிபர் சத்தியநாராயணா பயணம் செய்த ரெயில் பெட்டியில் நான் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஏறினேன். அதே பெட்டியில் கற்பகம், விஜி ஆகிய திருநங்கைகளும் ஏறினார்கள். படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த சத்தியநாராயணா என்னிடம் தகராறு செய்தார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நீ தான் என்னிடம் உள்ள பணம் 2 ஆயிரத்தை பறித்துக் கொண்டாய் என்றும், அதை திரும்ப வழங்க வேண்டும் என்றும் கேட்டு தகராறு செய்தார். எண் சட்டையை கிழித்தார். என்னை அவர் தாக்கினார். நான் அவரிடம் இருந்து தப்பிக்க ரெயிலில் இருந்து கீழே குதித்து விட்டேன். அதன் பிறகு ஓடும் ரெயிலில் இருந்து ஆந்திர வாலிபர் கீழே விழுந்தார். அவரை யார் தள்ளி விட்டார்கள் என்று எனக்கு  தெரியாது. அதே ரெயிலில் பயணம் செய்த மற்ற 2 திருநங்கைகளிடம் விசாரணை நடத்த வேண்டும். என்னை போலீசார் கைது செய்வார்கள் என்பதால் வி‌ஷத்தை குடித்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே போலீசார் திருநங்கை சுவேதாவை இன்று காலை விசாரணைக்காக திருப்பதூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து சென்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com