மது போதையில் தண்டவாளத்தில் படுத்த கொத்தனார் ரெயில் மோதி பலி

திருச்சி அருகே மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய கொத்தனார் ரெயில் மோதி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் தண்டவாளத்தில் படுத்த கொத்தனார் ரெயில் மோதி பலி
Published on

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள உடையான்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் உடையான்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் படுத்தவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.

இது குறித்து அறிந்ததும் சண்முகத்தின் மனைவி சென்று கணவரை எழுப்பி வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வைத்தார். இந்தநிலையில் போதை தெளியாத சண்முகம் இரவில் எழுந்து மீண்டும் உடையான்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் படுத்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சண்முகத்தின் மீது ஏறி இறங்கியது. இதில் சண்முகம் உடல் சிதைந்து துண்டு, துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருச்சி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்து போன சண்முகத்திற்கு மனைவியும், 1 குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மது போதையில் தண்டவாளத்தில் படுத்து ரெயில் மோதி கொத்தனார் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com