தருமபுரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம்

தருமபுரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை கட்டு செக்காரப்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவரது உடல் சிதைந்து கிடந்தது. இன்று காலை அந்த வழியாக  சென்ற பொதுமக்கள் பெண்ணின் உடல்கள் சிதைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தருமபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் பச்சை கலரில் புடவையும், ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். 

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்காக ரெயில் முன் பாய்ந்து இறந்தாரா? அல்லது யாராவது கற்பழித்து தண்டவாளத்தில் வீசி சென்றதால் ரெயிலில் அடிப்பட்டு  உடல் சிதைந்து கிடக்கின்றனவா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com