தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி: டெல்லி, மும்பையில் சி.பி.ஐ. சோதனை

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தட்கல் முறையில் போலி சாப்ட்வேரை பயன்படுத்தி ஏராளமான டிக்கெட்டுகளை ஒரு கும்பல் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் 14 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி: டெல்லி, மும்பையில் சி.பி.ஐ. சோதனை
Published on

புதுடெல்லி:

ரெயில்களில் பயணம் செய்ய ஆன்லைனில் முன் பதிவு செய்வோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில் உடனடி பயணம் மேற்கொள்ள இருப்போர் ‘தட்கல்’ முறையில் இணைய தளத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முன் பதிவு செய்ய முடியும். இந்த தட்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கான இணைய தளத்தில் போலி சாப்ட்வேரை பயன்படுத்தி ஏராளமான ரெயில் டிக்கெட்டுகளை ஒரு கும்பல் முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ரெயில்வேயில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஊழியர் ஒருவர் இதில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை சி.பி.ஐ. கைது செய்தது. இவரது போலி சாப்ட்வேரை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு ஏஜெண்டுகள் பலர் பயன்படுத்தி தினமும் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை தட்கல் முறையில் முன்பதிவு செய்து இருப்பது தெரிய வந்தது.

கைதானவர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி, மும்பை, ஜான்பூர் உள்பட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.90 லட்சம் பணம், ரூ.61 லட்சம் மதிப்புள்ள தங்கம், 15 லேப்டாப்கள், 15 ஹார்டு டிஸ்க்குகள், 52 மொபைல் போன்கள், 23 சிம்கார்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com