மதுரையில் ‘பந்த்’ அறிவிப்பு - ரெயில் மறியலுக்கு முயன்ற 40 பேர் கைது

தேவரின கூட்டமைப்பினர் மதுரையில் இன்று ‘பந்த்’ அறிவித்துள்ள நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர். #TrainPicket
முக்குலத்து புலிகள் அமைப்பினர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்குலத்து புலிகள் அமைப்பினர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

மதுரை:

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும், தமிழக பாடப்புத்தகத்தில் பசும்பொன் தேவரின் உண்மையான வரலாற்றை இடம்பெற செய்ய வேண்டும், மீண்டும் டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேவரின கூட்டமைப்பினர் மதுரையில் இன்று பந்த் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மதுரையில் அனைத்து பகுதியிலும் இன்று காலை முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளம் மற்றும் முக்கிய இடங்கள், விமான நிலைய பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக நின்றிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பந்த் அறிவிப்பு காரணமாக மதுரையில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #TrainPicket

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com