ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் ரெயிலை மறித்து பயணிகள் திடீர் மறியல்

ஈரோட்டில் ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் ரெயிலை மறித்து பயணிகள் ‘திடீர்’ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால்  ரெயிலை மறித்து பயணிகள் திடீர் மறியல்
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் அடிக்கடி வெளியூர் பயணிகள் ரெயில் முன் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் பெட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீர் தீர்ந்து விட்டது. ஆந்திரா மாநில எல்லையில் இருந்து வரும்போதே அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் தண்ணீர் இல்லை என்ற கூறி உள்ளனர். அதற்கு அந்த ரெயிலில் வந்த என்ஜின் டிரைவர்கள் வழியில் கண்டிப்பாக நிரப்பப்படும் என்று கூறி சமாளித்துக் கொண்டே வந்தனர்.

நேற்று இரவு அந்த ரெயில் ஈரோடு வந்ததும் இங்கு எப்படியும் தண்ணீர் நிரப்புவார்கள் என எதிர்பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் ரெயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேகமாக இறங்கி அந்த ரெயில் என்ஜின் முன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் பலர் ‘‘வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்’’ ‘‘நிரப்பு நிரப்பு ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பு’’ என கோ‌ஷமிட்டனர்.

‘‘ஈரோட்டில் தண்ணீர் நிரப்புங்கள் நாங்கள் கடந்த 2 நாட்களாக தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். கழிவறைக்கு கூட போக முடியவில்லை. தண்ணீர் நிரப்பாவிட்டால் ரெயிலை மேலும் எடுக்க விடமாட்டோம் என்று கூறினர்.

மறியல் செய்த பயணிகளிடம் என்ஜின் டிரைவரும் நிலைய அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ‘‘நேரம் இல்லை திண்டுக்கல் ரெயில்வே நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்பப்படும்’’ என்று சமாதானம் செய்தனர்.

பயணிகள் அந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தண்ணீர் இல்லாமல் எங்களால் ரெயிலில் ஏற முடியாது என்று விடாப்படியாக கூறி விட்டனர்.

இதை தொடர்ந்து நிலைய அதிகாரிகள் ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்தனர். அதன் பிறகே பயணிகளும் மறியலை கைவிட்டு ரெயிலில் ஏறினர்.

பயணிகளின் இந்த மறியல் போராட்டத்தால் 1ž மணி நேரம் ரெயில் தாமதமாக ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. #tamilnews

ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் ரெயில் முன் மறியல் போராட்டம் நடத்திய பயணிகள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com