பழனியில் ரெயிலில் அடிபட்டு சப்-இன்ஸ்பெக்டர் பலி

பழனியில் ரெயிலில்வே கேட்டை கடக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பழனியில் ரெயிலில் அடிபட்டு சப்-இன்ஸ்பெக்டர் பலி
Published on

பழனி:

பழனி புது தாராபுரம் ரோடு திருமலை நகரில் குடியிருப்பவர் பாண்டியராஜன் (வயது 62) இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.

இவர் ஆயுத பூஜைக்கு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் திருமலை நகரில் இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார்.

ஆள் இல்லாத ரெயில்வே கேட் அருகே வரும் போது மோட்டார் சைக்கிளில் பழுதானது. அப்போது ரெயில்வே கேட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார். அந்த சமயம் பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் பயணிகள் ரெயில் அவ்வழியாக வந்தது. ரெயில் வந்ததை கவனிக்காத பாண்டியராஜன் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இறந்து போன பாண்டியராஜனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சித்ரா என்ற மகளும், ராம்பிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com