ரெயிலில் அடிபட்டு பெண் பலி

ரெயிலில் அடிபட்டு பெண் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

திருச்சியை அடுத்த எலமனூருக்கும், பெருகமணிக்கும் இடையே ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை சுமார் 55 வயதுடைய பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற ரெயிலில் அவர் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com