

ராயபுரம்:
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அலுவலகம் சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ளது. இன்று காலை 9 மணி முதல் அவர் தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த திடீர் உண்ணாவிரதம் பற்றி அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத மைனாரிட்டி அரசு நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும்.
இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகம் அல்லது கவர்னர் மாளிகை முன்பு எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்றார்.
டிராபிக் ராமசாமி எந்த இடையூறும் இல்லாமல் தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.