எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூடலூர் மற்றும் மசினகுடி ஆகிய பகுதிகளில் இருந்து தலைகுந்தா வந்தடையும் அனைத்து வாகனங்களும் தலைகுந்தா மட்டம், குளிர்சோலை, கோழிப்பண்ணை, மார்லிமந்து, புதுமந்து வழியாக ஸ்டீபன் சர்ச் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் இருந்து விழா மேடைக்கு வர உள்ள பயனாளிகளும், கட்சி பிரமுகர்களும் பிங்கர்போஸ்ட், காந்தல் முக்கோணம், கஸ்தூரிபாய் காலனி, மினிபோட் அவுஸ், குட்ஷெப்பர்ட் பள்ளி, பர்ன்ஹில் ஜங்‌ஷன், தாமஸ் சர்ச் வழியாக எட்டின்ஸ் ஜங்‌ஷன், முருகன் லாட்ஜ் நுழைவு வாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் பகுதியில் இருந்து வர உள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளுக்கு லவ்டேல் ஜங்‌ஷனில் இருந்து காந்தி பேட்டை, மஞ்சனக்கொரை வழியாக எமரால்டு ரோடு வந்தடைந்து பர்க்ஹில் ஜங்‌ஷன் தாமஸ் சர்ச் ஜங்‌ஷன் வழியாக முருகன் லாட்ஜ் நுழைவு வாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் பகுதியில் இருந்து வரஉள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும், பைகமந்து வழியாக முத்தரை, பாலாடா, வந்து பர்ன்ஹில் ஜங்‌ஷன், தாமஸ் சர்ச் ஜங்‌ஷன் வழியாக முருகன் லாட்ஜ் நுழைவுவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக வரஉள்ள கட்சி பிரமுகர்களும் பயனாளிகளும் சேரிங்கிராஸ், கமர்ஷியல் ரோடு, காபி அவுஸ், மணிக்கூண்டு ஏ.டி.சி. வந்தடைந்து ஏ.டி.சி. ஜங்‌ஷன் வழியாக உள்ள நுழைவு வாயில் வழியாக ரேஸ்கோர்சில் உள்ள நிகழ்ச்சி பந்தல் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு செய்யப்பட்டுள்ளது.

30-ந்தேதி நகரில் உள்ள எந்த ஒரு பகுதியிலும் ஆட்டோ, டாக்சி, வேன், பஸ், லாரிகள் ஆகியவைகள் எந்த ஒரு பகுதியிலும் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது.

உள்ளூர் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களை தெரிந்து வாகன நெரிசலை குறைப்பதற்கு போலீசாருடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com