முத்துப்பேட்டை அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்: மனைவி பலி

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்: மனைவி பலி
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் காரைக்கால் மதகடி தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மபிரபு. இவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னத்தூர் வளைவு அருகே மணல் டிராக்டர் வந்து கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்குநேர் மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே அமுதா தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த அவரின் கணவர் தர்மபிரபுவை அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் தம்பிக்கோட்டை மேலக்காடை சேர்ந்த முருகானந்தம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com