இண்டூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

இண்டூர்:

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்துள்ள பண்ட அள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சிலம்பரசன் (வயது30). இவர் அந்த பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சிலம்பரசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு டிராக்டர் டிரைவர் தப்பியோடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com