செய்யாறில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் பலி

செய்யாறில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
செய்யாறில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

செய்யாறு:

செய்யாறு திரும்பூண்டி காலனியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் நவீன்குமார் (வயது 19). செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை பைக்கில் நவீன்குமார், துரை இருவரும் செய்யாறு டவுனுக்கு உரம் வாங்க சென்றனர்.

கோணமடை குளக்கரையில் வந்தபோது கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் பைக்மீது மோதியது. இந்த விபத்தில் நவீன்குமார் சம்பவ இடத்தில் இறந்தார்.

துரை படுகாயம் அடைந்தார். அனக்காவூர் போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com