கூடலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கூடலூர் அருகே சுற்றுலா வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

ஊட்டி:

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, தங்கள் வாகனம் மூலம், கூடலூர் நோக்கி வந்தனர். அதில், டிரைவர் உட்பட,16 பேர் பயணித்தனர். 

ஊசிமலை அருகே, அவர்கள் வந்தபோது, சுற்றுலா வாகனம் பிரேக் பிடிக்காமல், சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில், ஆலப்புழாவை சேர்ந்த ராமச்சந்திரன், (55), விஜயகுமார், (44), ஜோகி, (54), சுகி, 34, ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நடுவட்டம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com