ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை அமல்- பொதுமக்கள் போராட்டம்

ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். #IranSanctions #USSanctions
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை அமல்- பொதுமக்கள் போராட்டம்
Published on

ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது.

மேலும் ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடை இருக்கும் என்றும் எச்சரித்தார். ஈரான் மட்டுமின்றி அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த தடை பாயும் என்றும் தெரிவித்தார்.

அந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரத்துக்கு புறப்படும் முன்பு அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஈரான் மீதான பொருளாதார தடை கடுமையாக இருக்கும். அது எப்போதும் இல்லாத வகையில் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். என்ன நடக்கும் என்பதை பார்க்க தானே போகிறோம் என்றார்.

இதன் மூலம் எண்ணை ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com