89 பயங்கரவாதிகள் பலி... 5 பிணைக்கைதிகள் மீட்பு... நைஜீரிய ராணுவம் அதிரடி

நைஜீரிய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டனர்.
நைஜீரிய ராணுவம்
நைஜீரிய ராணுவம்
Published on

அபுஜா:

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசியத்தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அப்பகுதிக்கு நேற்று விரைந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை குறிவைத்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த தேடுதல் வேட்டையில் சூர்மி பகுதியில் பதுங்கி இருந்த 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 3 பெண்கள் உள்பட பிணைக்கைதிகள் மொத்தம் 5 பேர் மீட்கப்பட்டனர்.  

தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் திருடப்பட்ட 322 மாடுகள், 77 இரு சக்கரவாகனங்கள், 9 செல்போன்களும் மீட்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பயங்கரவாதிகளுடன் நடந்த இந்த சண்டையில் நைஜீரிய படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com