இலங்கை: யாழ்ப்பாணம் பகுதியில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடமாற்றம்

இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை: யாழ்ப்பாணம் பகுதியில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடமாற்றம்
Published on

கொழும்பு:

இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் யாழ்பாணம் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

150-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com