

அரூர்:
அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளிகளை கம்பைநல்லூர், அரூர் மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இதை வியாபாரிகள் வாங்கி சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
சமீப காலமாக அரூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. அரூர் மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.