சேலம் மார்க்கெட்களில் தக்காளி விலை 50 ரூபாயாக உயர்வு

சேலம் மார்க்கெட்களில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சேலம் மார்க்கெட்களில் தக்காளி விலை 50 ரூபாயாக உயர்வு
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com