டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது.
ஹர்விந்தர் சிங்
ஹர்விந்தர் சிங்
Published on

டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம், துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றனர். 

இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. வில்வித்தை (ரிகர்வ்) போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். அரையிறுதியில் தோல்வி அடைந்த ஹர்விந்தர் சிங், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், தென்கொரிய வீரர் கிம் மின் சூவை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில், பாராலிம்பிக்கில் இந்திய அணி அதிக பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com