பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார் - அயோத்தி தொகுதியில் போட்டி

புதிய அரசியல் கட்சியை தொடங்கிய வி.ஹெச்.பி. முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா, வரும் பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொதியில் போட்டியிடுகிறார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya
பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார் - அயோத்தி தொகுதியில் போட்டி
Published on

புதுடெல்லி:

வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

இந்நிலையில், பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.

மேலும், வரும் பொது தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியா தொகுதியில் போட்டியிட உள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கப் போவதில்லை. நம்பகத்தன்மையுடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com