

கொழும்பு:
இலங்கையில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.
அதிபர் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து சிறினோ போட்டியிட்டார். அக்கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் நீடித்தது.
இந்த நிலையில் மைத்ரி பால சிறிசேனா அதிபராக பதவி ஏற்ற பின் முதன் முறையாக இலங்கையில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அங்கு 24 நகராட்சி கவுன்சில், 41 நகரமைப்பு கவுன்சில் மற்றும் 275 கிராம சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,375 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர் மகிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால் ஏராளமானவர்கள் ஆர்வமாக சென்று நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று ஓட்டு பதிவு செய்கின்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 65 ஆயிரம் போலீசாரும், 900 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.
ஆளும் கூட்டணி வெற்றி பெறுமா? இந்த தேர்தலில் அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் அதிபர் ராஜபக்சே அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடித்த சிறிசேனாவை இத்தேர்தலில் பழிவாங்க ராஜபக்சே தீவிரமாக களம் இறங்கியுள்ளார். எனவே வெற்றி பெறும் முனைப்பில் ஆளும் கூட்டணி தீவிரமாக உள்ளது. #Tamilnews