என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள்

என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள் ஆகும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை: 

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்தனர். அதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி இருந்தனர்.

கட்டணம் செலுத்திய மாணவ-மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடந்த 20-ந்தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் நலன்கருதி, அதை 24-ந்தேதி (இன்று) வரை நீட்டித்து உயர்கல்வி துறை உத்தரவிட்டது. அதன்படி, சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசிநாள் ஆகும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்தபின்பு, ரேண்டம் எண் வெளியிடப்படும். அதுகுறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களும் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com