

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம்
எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர்
பாராளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் பட்காமில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஐநா சபையால் தான் இன்று உலகம் சிறப்பாக உள்ளது - பிரதமர் மோடி பேச்சு
ஐ.நா.சபையின் 75 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி ஐ.நா.சபையால் தான் இன்று உலகம் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா கட்டிட விபத்து - பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு
மும்பையை அடுத்த பிவண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை- அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது.
கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
போட்ஸ்வானா: 330 யானைகளின் மர்ம மரணத்திற்கு காரணம் பாக்டீரியா தான்.. ஆய்வில் தகவல்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் 330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இந்த மரணங்களுக்கு தண்ணீரில் உருவாகும் விஷத்தன்மையுடைய பாக்டீரியா தான் காரணம் என தெரியவந்துள்ளது.
இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்வாட்ஸ்மனை வீழ்த்தி 5-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.
ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற இருக்கிறோம்: ஸ்டீவ் ஸ்மித்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.