சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை, ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் வீடியோ தொகுப்பு

சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை, ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.
சபரிமலை கோவில்
சபரிமலை கோவில்
Published on

கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் புதிதாக 70,589 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது
   
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
   
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.

குஜராத்தில் சோகம் - மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

குஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
   
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆதரவு நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆலோசனை
   
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்- மருத்துவமனை அறிக்கை
   
கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்- சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து
   
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

15 கோடி கொரோனா சோதனை கருவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் - அதிபர் டிரம்ப்
   
அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி
   
இந்தோனேசியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஐபிஎல் 2020: கடைசி பந்தில் கோலி அடித்த பவுண்டரியால் மும்பையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி
   
மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

அடுத்த மாதம் நடைபெற இருந்த இலங்கை - வங்காளதேசம் தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
   
வங்காளதேசம் அணி இலங்கை சென்று விளையாட திட்டமிட்டிருந்த டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி
   

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com