புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

சாமளாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மங்கலம்:

மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி மற்றும் போலீசார் சாமளாபுரம் பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது சாமளாபுரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் ராமராஜை (வயது 30) கைது செய்த போலீசார், அவருடைய கடையில் இருந்து 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.                       

X

Maalai Malar
www.maalaimalar.com