டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை.
டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை
Published on

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் சதீஷ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். ஷிஜித் சந்திரன் சிக்சராக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

இருவரும் அரைசதம் அடித்தனர். 12 ஓவரில் மதுரை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் ஆட்டத்தை பார்க்கையில் ஒரு கட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 200 ரன்னைத் தாண்டும் சூழ்நிலை இருந்தது.

அந்தவேளையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் சதீஷ் 13-வது ஓவரை வீசினார். இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது. முதல் பந்தில் அருண் கார்த்திக்கும், 2-வது பந்தில் ஷிஜித் சந்திரனும் ஆட்டம் இழந்தனர்.

அருண் கார்த்திக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ருடன் 55 ரன்களும், ஷிஜித் சந்திரன் 37 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்களும் சேர்த்தனர். இதே ஓவரின் கடைசி பந்தில் ஷாருக்கா கான் ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியது.


முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்த கார்த்திக் - சந்திரன்

அதன்பின் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியின் ரன்விகிதம் மளமளவென குறைந்தது. சுரேஷ் குமார் 16 ரன்னிலும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 13 ரன்னிலும், விக்னேஷ் 5 ரன்னிலும், கார்த்திகேயன் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. மதுரை அணி கடைசி 7 ஓவரில் 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com