டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணியின் ஆதிக்கத்தை கோவை கிங்ஸ் தடுக்குமா?
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 25-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தத் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக இருக்கும் திண்டுக்கல் அணி இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
கோவை அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. 3 வெற்றி, 3 தோல்வியுடன் அந்த அணி 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
திண்டுக்கல் அணியின் ஆதிக்கத்துக்கு கோவை கிங்ஸ் முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க் கப்படுகிறது.

