டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோபிநாத் பந்தை அடித்த காட்சி.
கோபிநாத் பந்தை அடித்த காட்சி.
Published on

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. கோவை கிங்ஸ் அணி கேப்டன் அபினவ் முகுந்த் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கி விளையாடிது. தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜுவும் கோபிநாத்தும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். கோபிநாத் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். 

ஸ்கோர் 106 ரன் இருக்கும்போது கோபிநாத் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 82 ரன் எடுத்தார். அடுத்த வந்த ஹரிஷ் குமார் கங்கா ஸ்ரீதர் ராஜுவுடன் இணைந்து ஆடினார். இறுதியில் சென்னை சூப்பர் கல்லீஸ் அணி 13.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கங்கா ஸ்ரீதர் ராஜு 31 ரன்னுடனும், ஹரிஷ் குமார் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com