திண்டுக்கல் அணிக்கு 135 ரன்களை இழக்காக நிர்ணயித்தது கோவை

டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 25-வது ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக கோவை அணி நிர்ணயித்துள்ளது.
பிரதோஷ் ராஜன் பந்தை விளாசும் காட்சி
பிரதோஷ் ராஜன் பந்தை விளாசும் காட்சி
Published on

நெல்லை:

டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 25-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சாருக் கான் 30, அபினவ் முகுந்த் 21, வெங்கட்ரமணன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த பிரதோஷ் ராஜன் 2 பவுண்டரி 2 சிக்சர் உள்பட 43 ரன்கள் விளாசினர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் அணி சார்பில் பிரேஷ் 3, ரோகித் 2 விக்கெட்டுகளும் அபினவ், அருண் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com