டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் ஜெகதீசனின் அபார அரைசதத்தால் மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணியத்துள்ளது திணடுக்கல் #TNPL2018
டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
Published on

அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கவுரவமான ஸ்கோரை எட்ட கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன என் நடராஜன் போராடினார். அடுத்த வந்த ஆர் விவேக் 13 ரன்னில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு ராமலிங்கம் ரோஹித் ஜெகதீசன் உடன் ஜோடி சேர்ந்தார். ரோஹித்தை வைத்துக் கொண்டு ஜெகதீசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 85 ரன்னாக இருக்கும்போது ரோஹித் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com