தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து குதித்து  மாணவர் தற்கொலை
Published on

சென்னை:

மதுரை மேலூரை சேர்ந்த மாணவர், ஷாருக்கான். இவர் மதுரையில் உள்ள மத்திய அரசு தொழில் நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த கல்லூரி தொடர்பான விழா கடந்த சில தினங்களாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார்.

சென்னை தி.நகர் நடேசன் பூங்காவின் பின்புறம் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இங்கிருந்து தினமும் கல்லூரி விழாவுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் ஷாருக்கான், அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவர் ஷாருக்கான் தற்கொலை குறித்து மதுரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com