தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், மத்திய அரசு சார்பில் 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக ரூ100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com