

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 229 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நூறு நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்பட்டு வருகிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியாக ஒருவருக்கு 229 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நூறு நாள் வேலை திட்டத்தில் 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது.