பெண் நிருபர் கன்னத்தில் தட்டிய கவர்னர்

கவர்னர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் நிருபரின் கன்னத்தை கவர்னர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண் நிருபர் கன்னத்தில் தட்டிய கவர்னர்
Published on

கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த நிருபர் உள்பட சில பெண் நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்க முயன்றனர். அப்போது, கவர்னர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அங்கு நின்றிருந்த மூத்த நிருபர் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார்.

இதை மூத்த நிருபர் கண்டிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கவர்னர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் கவர்னரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com