

புதுடெல்லி:
தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, பன்வாரிலால் புரோகித் கூடுதலாக அந்த பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.