தஞ்சையில் 2-ந்தேதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை பெறுகிறார் கவர்னர்

தஞ்சாவூருக்கு ஜன.2-ந்தேதி வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை பெறுகிறார் என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் 2-ந்தேதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை பெறுகிறார் கவர்னர்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் சலங்கை நாதம் நிறைவு விழா மற்றும் திருவையாறு தியாகராஜர் 171-வது ஆராதனை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார்.

2-ந்தேதி தஞ்சை அரசினர் சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார்.

எனவே தமிழக கவர்னரை சந்திக்க விரும்பமுள்ள மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் 2-ந்தேதி மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை சந்தித்து மனுக்களை வழங்கலாம்.

இத்தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com