டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்ற வீதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது
Published on

புதுடெல்லி:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் அருகே தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தை கடந்த 26-ந்தேதி தொடங்கினர்.

போராட்டத்தின் 4-ம் நாளான இன்று தமிழக விவசாயிகள், காதிருந்தும் செவிடராய் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு கைதட்டி ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் பாராளுமன்ற வளாக வீதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com