தேர்தல் களம்... ஒரு மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் அதிக அளவு வாக்குப்பதிவு

அசாமில் நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 53.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
Published on

புதுடெல்லி:

தமிழகம், கேரளா மற்றும் புதுவையில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுதவிர அசாமில் இறுதிக்கட்ட தேர்தலும், மேற்கு வங்காளத்தில் 3ம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

தமிழகத்தில் மதியம் மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியில் 53.01% வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளாவில் மதியம் 12.30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 41.57% ஆக இருந்தது. 

அசாமில் நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 53.23% வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்குவங்காளத்தில் 1 மணி நிலவரப்படி 53.89% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒருமணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com