இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு அங்கு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: முதல்வர் கடிதம்
Published on

சென்னை:

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு அங்கு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசின் வசமுள்ள 140 படகுகளையும், 54 மீனவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கை வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இலங்கை அரசு விடுவிப்பதாக ஒப்புக்கொண்ட 61 படகுகளில் 36 படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன என முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com