வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சிக்கான நடுநிலையான அம்சங்களை பட்ஜெட் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
Published on

சென்னை:

2018-19-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். வரவேற்பு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் பட்ஜெட்டுக்கு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையாக உள்ளது. மருத்துவம், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஒதுக்கப்பட்ட நிதிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள மெகா உணவுப் பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com