

திருச்சி:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தலைமை தீயணைப்பு மீட்பு பணி நிலையமான திருச்சி தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தின் நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 2025 ச.மீ. நிலத்தில் அரசாணைப்படி ரூ.4 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரத்து 278 மதிப்பீட்டில் நிலைய அலுவலர்கள் குடியிருப்பு 3, பணியாளர்கள் குடியிருப்பு 36-ம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (6-ந்தேதி, திங்கட்கிழமை) காலை காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அலுவலர் புளுகாண்டி, உதவி மாவட்ட அலுவலர் கருகாகரன், சுரேஷ் கண்ணன், நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர் வீட்டு வசதி கழக உதவி பொறியாளர் பிருந்தாதேவி, ஒப்பந்ததாரர் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.