சாலை விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொள்ளாச்சியில் சாலை விபத்தில் பலியான 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சாலை விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொள்ளாச்சி கெடு மேடு அருகில், கார் விபத்துக்குள்ளாகி, வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில், மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் அவரது மனைவி சித்ரா 2 குழந்தைகள் நந்தனா, பூஜா மற்றும் பன்னீர்செல்வம் மனைவி லதா அவரது குழந்தைகள் கவியரசு, தாரணி மற்றும் சுப்பிரமணியம் மனைவி சுமதி ஆகிய 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

இவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com