ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திடீர் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்துள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திடீர் சந்திப்பு
Published on

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் நான்காவது கூட்டம் இது ஆகும். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது குறித்தும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்தும் , சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பது குறித்தும், டாஸ்மாக் கடைகள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார். அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இருப்பினும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எனினும் இது வழக்கமான சந்திப்பா அல்லது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com