டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் ஸ்டாலின்

டவ் தே புயல் காரணமாக மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களால் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
Published on

அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கரையை கடக்கும்போது சுமார் 160 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் டவ் தே புயல் காரணமாக கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. சில மீனர்வகள் கரை திரும்பிய நிலையில் நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 21 பேர் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com