

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
• தாமிரபரணி- நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
• 2018-19ம் நிதியாண்டில் மேலும் ரூ.250 கோடியில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை
• 2019-ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது
• நீர் வள, நில வள இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ரூ.655.29 கோடி நிதி ஒதுக்கீடு
• அரசு அலுவலர்களின் ஓய்வூதியம், பிற ஓய்வு கால பலன்களுக்காக பட்ஜெட்டில் ரூ.25,362.20 கோடி
• நியாய விலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி
• விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு
• கைத்தறி உதவி திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
• வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்
• கைத்தறி நெசவில் புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்த நிதி உதவி அளிக்கப்படும்
• கைத்தறி துணி விற்பனை தள்ளுபடி மானியம் 80 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்வு
• கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1,240 கோடி ஒதுக்கீடு
• கதர் துறைக்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு
• சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,747.72 கோடி ஒதுக்கீடு
• ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,146.30 கோடி ஒதுக்கீடு
• சென்னை பெருநகர வளர்ச்சி இயக்கத்தை அரசு மீண்டும் செயல்படுத்துவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
• மாநில கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு