எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
Published on

சென்னை:

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பினார். அதன்பின்னர் மோதல் முற்றிய நிலையில், ஆட்சியை அகற்றும் பணியை தொடங்கிவிட்டதாக டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார். இதையடுத்து தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை டிடிவி தினகரன் மற்றும் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com